குறைந்த விலையில் வழங்கப்படும் ஃப்ரீடம் போனுக்காக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் ஒரு வாரத்துக்குள் திரும்ப அளிக்கப்படும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம், ரூ. 251 விலையில் ஃப்ரீடம்என்ற பெயரில் 'ஸ்மார்ட் போன்' வழங்குவதாக அறிவித்தது.
இதையடுத்து போட்டிப் போட்டுக் கொண்டு கோடிக்கணக்கானோர் மலிவு விலை போனை பெறுவதற்காக முன்பதிவு செய்தனர். மேலும், பலர் பணமும் செலுத்தினர்.வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தை ரிங்கிங்பெல்ஸ் நிறுவனம் தனியான ஒரு கணக்கில் வரவு வைத்திருந்தது.இந்நிலையில் அந்தப் பணத்தையெல்லாம் திரும்ப அளிப்பதற்கு அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக நிறுவனத்தின் தலைவர் அசோக் சதாதா அறிவித்துள்ளார். வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் அனைத்தும் அவரவர் கணக்கில் இந்த வார இறுதிக்குள் வரவு வைக்கப்படும் என்றும் அசோக் கூறினார்.குறைந்த விலை போனை பெறுவதற்காக இதுவரை 7 கோடிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இனி, போனுக்காக வாடிக்கையாளர்களிடம் பணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது.
பொருளைப் பெற்றுக் கொண்டப் பின்னரே பணம் செலுத்தும் திட்டத்தின் கீழ் மட்டுமே போன் விற்பனை செய்யப்படும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குநர் மோகித் கோயல் கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...