தமிழ்நாடு
மின் வாரியத்தில், 2,175 ஊழியர் தேர்வுக்கு, மார்ச், 7 முதல், மின் வாரிய
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மின் வாரியம், கணக்காளர்,
உதவியாளர் உட்பட, 2,175 புதிய ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது.
இதற்கு, 'மின் வாரிய இணையதளத்தில், மார்ச், 2 முதல் விண்ணப்பிக்கலாம்' என,
மின் வாரியம் ஏற்கனவே அறிவித்தது. ஆனால், திட்டமிட்டபடி, தேர்வுக்கு
விண்ணப்பிக்கும் வசதி துவங்காததால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், 'தேர்வுக்கு, மார்ச், 7 முதல், மின் வாரிய இணையதளம் மூலம்
விண்ணப்பிக்கலாம்; கட்டணம், கடைசி தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள், இணைய
தளத்தில் தெரிவிக்கப்படும்' என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...