2030-ம் ஆண்டில் தண்ணீரின் தேவை இன்னும் 40 சதவீதம் அதிகரித்து தண்ணீர்
பஞ்சத்தால் மக்கள் அவதியுறும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சொ.சுப்பையா எச்சரித்துள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொழிலக வேதியியல் துறை சார்பில் உலக
தண்ணீர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிலக வேதியியல் துறை தலைவர் பி.
மணிசங்கர் வரவேற்றார். இதற்கு தலைமை வகித்து துணைவேந்தர் சொ. சுப்பையா
பேசியதாவது:
நல்ல உடல் நலத்திற்கும், நல்ல உணவிற்கும், நிலையான வளர்ச்சிக்கும்
தண்ணீரைச் சார்ந்திருக்கிறோம். ஒரு நீச்சல் குளத்தை தண்ணீரால் நிரப்பு
வதற்கு தேவைப்படும் தண்ணீரின் அளவைவிட ஒரு கார் தயாரிக்க அதிக தண்ணீர்
தேவைப்படுகிறது.
பருவ நிலை மாறுபாடானது உணவு பாதுகாப்பிற்கும், விவ சாய தொழிலுக்கும் சவாலாக
உள்ளது. உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை உரிய தண்ணீர் தேவையை
நோக்கி இருக்கின்றனர். 2030-ம் ஆண்டில் தண்ணீரின் தேவை இன்னும் 40 சதவீதம்
அதிகரித்து தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் அவதியுறும் நிலை ஏற்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும், அறிவார்ந்த திட்டங்கள் வகுத்தும்
தண்ணீர் செலவை குறைத்து கழிவு நீர் தரத்தை மேம்படுத்தலாம். இதுபோன்ற
திட்டங்களை செயல்படுத்தி மக்களிடம் தண் ணீரின் தேவையையும், அவசியத் தையும்,
முக்கியத்து வத்தையும் வலியுறுத்தி விழிப்புணர்வு அடையச் செய்யலாம்
என்றார்.
கோவை தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.ஜெ. பாண்டியன் பேசியதாவது:
தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்போதுதான் நாம் தண்ணீ ரைப் பற்றி
சிந்திக்கிறோம். வீட்டு உபயோகம், வணிக நிறுவனங்களிலும் தண்ணீர் கசிவு
ஏற்படுவதை தடுக்க வேண்டும். நீர் ஆதாரங்கள் எல்லாம் சுருங்கி வரும்
நிலையில், ஒவ்வொரு குடிமகனும் நீர் வளங்களைக் கண்டறிந்து, அவற்றைப்
பாதுகாப் பது அவசியம். ஒவ் வொருவரும் நீர் வளங்கள் அழியா வண்ணம்
பாதுகாப்போம் என்று சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினரும் பொருளாதாரத் துறைத் தலைவ
ருமான அ. நாராயணமூர்த்தி, 300-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து
கொண்டனர். பேராசிரியர் ஜி.பரிதிமாற் கலைஞன் நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...