எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2–ம் தாள் தேர்வின் போது காப்பிஅடித்த 32
தனித்தேர்வர்கள் பிடிபட்டனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுதமிழ்நாடு மற்றும்
புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நேற்று முன்தினம் தொடங்கி
நடந்து வருகிறது.
நேற்று தமிழ் 2–ம் தாள் தேர்வு நடந்தது. இதில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 223 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
தேர்வுகளை முடித்துக் கொண்டு வெளியே வந்த சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கூறியதாவது:–எளிதாக இருந்ததுதேர்வில் அனைத்து கேள்விகளும் எங்கள் ஆசிரியர்கள் கற்றுத்தந்த பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன. 1, 2 மதிப்பெண் கேள்விகள் எளிதாகஇருந்ததால் தேர்வை எந்தவித சிரமமும் இன்றி எளிதாக எழுதினோம். பகுதி–2ல், 5 மதிப்பெண் கேள்வியாக தமிழகத்தின் முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். பற்றி கட்டுரை எழுத கோரியிருந்தனர்.நாங்கள் பிறப்பதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். மறைந்துவிட்டார். இருந்தாலும் எங்கள் பெற்றோர்கள் அவரை பற்றி கூறிய நல்ல கருத்துகள் மூலம், கட்டுரை நன்றாக எழுதினோம்.
90 மதிப்பெண் வரை எளிதாக பெற வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கிறோம். இதேபோன்று அனைத்து தேர்வுகளும் எளிதாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு மாணவிகள் கூறினர்.32 பேர் பிடிபட்டனர்தமிழ் 2–ம் தாள் தேர்வின் போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 தனித்தேர்வரும், வேலூர் மாவட்டத்தில் 20 தனித்தேர்வரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 11 தனித்தேர்வர்களும் பிடிபட்டனர். மொத்தத்தில் காப்பி அடித்த 32 தனித்தேர்வர்கள் பிடிபட்டனர்.இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...