12–ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் ‘வாட்ஸ்அப்’பில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்கு பதிவியல் (அக்கவுண்டன்சி) தேர்வு காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில் ‘வாட்ஸ்அப்’பில் தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம்
முன்பாக வினாத்தாள் பரவியதாக மும்பை கல்வி மண்டலத்திற்கு தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அதிகாரிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளும்,
வலைதளத்தில் பரவிய வினாத்தாளும் ஒன்றுதானா என்பதை சரிபார்த்த போது இரண்டும்
ஒன்று தான் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மும்பை கல்வி மண்டல தலைவர் தத்தாரே ஜகதாப் கூறுகையில்,
தேர்வு தொடங்கிய சில நிமிடங்களுக்கு முன் தான் வினாத்தாள் ‘வாட்ஸ்அப்’பில்
பரவி உள்ளது.
எனவே இதை பெரியதாக எடுத்து கொள்ளவேண்டாம். எனினும் இந்த விவகாரம்
குறித்து சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்க உள்ளோம் என கூறியுள்ளார்.
‘வாட்ஸ்அப்’பில் வெளியான வினாத்தாளுடன் மிராரோட்டில் உள்ள தேர்வு மையத்தில் மாணவர் ஒருவர் பிடிபட்டுள்ளார்.
மேலும், பொலிசார் அந்த மாணவனை பிடித்து அவருக்கு எப்படி வினாத்தாள் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...