மதுரை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வில் நேற்று தமிழ்
முதல்தாள் தேர்வு நடந்தது. முதல் தேர்வே முத்தான தேர்வாக இருந்ததாக
மாணவர்கள் தெரிவித்தனர்.
மதுரையை சேர்ந்த மாணவர்கள் கூறியதாவது:
எதிர்பார்த்தது வரவில்லை :
ஏ.ஹரிணி, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி: செய்யுள் நெடுவினாவில்
திருக்குறள் கேள்வி வரும் என எதிர்பார்த்தோம். அந்த கேள்வி வரவில்லை.
சிறப்பு கையேட்டில் உள்ள ஒரு வரி வினாக்கள் வரவில்லை. புத்தகத்தின்
பின்னால் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டன. ஒருவரி வினா எளிதாக
இருந்தது. முழுமதிப்பெண்ணுக்கு வாய்ப்பு உள்ளது.
என்.அஜித்குமார், எஸ்.ஆர்.டபிள்யூ.டபிள்யூ.ஓ., பள்ளி: தேர்வு எளிதாக
இருந்தது. எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடிந்தது. ஒருவரி வினாக்கள்
சுற்றி வளைக்காமல் நேரடியாக கேட்கப்பட்டன. முழு மதிப்பெண் கிடைக்கும்
வாய்ப்புள்ளது.
எளிமையான கேள்விகள்:
கே.புனிதா, பி.எம்.எஸ்., வித்யாலயம்: ஒருவரி, இரு வரி வினாக்கள் எளிமையாக
கேட்கப்பட்டன. மாணிக்கவாசகரின் 'மெய்தான் அரும்பி...' பாடலே மனப்பாட பாடலாக
கேட்கப்பட்டது. திருக்குறளில் நெடுவினா கேட்கவில்லை.
அருண், தமிழாசிரியர், குட்லக் மெட்ரிக் பள்ளி: இந்தாண்டு ஒருவரி வினாக்கள்
எளிமையாக கேட்கப்பட்டுள்ளன. கேள்விகளை வெளியே இருந்து கேட்காமல் புத்தக
வினாவில் இருந்தே எடுக்கப்பட்டன. ஒருவரி வினாக்கள் எல்லாருக்குமே
மதிப்பெண்களை அள்ளித்தரும். மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு
செய்யும் வகையில் நெடுவினாக்கள் இருந்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...