Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

VAO பணிக்கு எழுத்து தேர்வு 813 பணியிடங்களுக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதினர்

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. 813 காலிப்பணியிடங்களுக்கு 7 லட்சத்து 70 ஆயிரத்து 750 பேர் எழுதினார்கள். அதாவது ஒரு பணிக்கு 948 பேர் போட்டி போட்டு எழுதி உள்ளனர்.
 
கிராம நிர்வாக அலுவலர்
கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் 813–ஐ நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை மேற்கொண்டது. அதற்காக 10 லட்சத்து 28ஆயிரத்து 244 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அவற்றில் 578 விண்ணப்பங்கள் தகுதி இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டன. அவை போக மொத்த விண்ணப்பங்கள் 10 லட்சத்து 27 ஆயிரத்து 666 ஏற்கப்பட்டன.
இதில் 5 லட்சத்து 19ஆயிரத்து 713 பேர் ஆண்கள். 5 லட்சத்து 7 ஆயிரத்து 908 பேர் பெண்கள். 45 பேர் திருநங்கைகள். தேர்வு எழுத 244 ஊர்களில் 3 ஆயிரத்து 566 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
அருள் மொழி பார்வையிட்டார்
சென்னையில் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாரதி மகளிர் கல்லூரி, செயிண்ட் அன்னாள் பள்ளி உள்ளிட்ட 257 மையங்களில் தேர்வு நடந்தது. 43 மையங்கள் பிரச்சினைக்கு உரிய மையங்களாக கருதப்பட்டன.
நேற்று பாரதி மகளிர் கல்லூரியில் தேர்வு எழுதியவர்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் கே.அருள் மொழி, செயலாளர் விஜயகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டாளர் ஷோபனா ஆகியோர் பார்வையிட்டனர்.
25 சதவீதம் பேர் வரவில்லை
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் தேர்வு எழுத 25 சதவீதம் பேர் வரவில்லை. 75 சதவீதம் பேர்கள் மட்டுமே தேர்வு எழுதினார்கள். நேற்று தேர்வு எழுதியவர்களை கணக்கிட்டால் ஒரு கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கு 948 பேர் போட்டி போட்டு எழுதி உள்ளனர்.
தேர்வு காலை 10மணிக்கு தொடங்கி பகல் 1 மணிக்கு முடிவடைந்தது. மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவர்களில் சிலரை கேட்டபோது, கேள்விகள் எளிமையாகத்தான் இருந்தன என்று தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive