TNPTF-TNGEA அமைப்பு தலைமை செயலாளரிடம் சந்திப்பு- இச்சந்திப்பில் முக்கிய துளிகள் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஆரம்பபப்ள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் திரு.மோசஸ் ஆகியோர் பணியாளர் மற்றும் நிர்வாகச்சீர்திருத்தத்துறை செயலாளர்
திரு.பா.வி.டேவிதார் அவர்களையும் மற்றும் நிதி துறையில் அரசின்கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. கே.சண்முகம் அவர்களையும்சந்தித்து கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
இச்சந்திப்பில் முக்கிய துளிகள்:
1.முதல்வர் அறிவித்த அறிவிப்புகளில் எஞ்சியுள்ளவைகளுக்கு ஓரிருநாளில் அரசாணை வெளியீடு
2. சி.பி.எஸ். திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும்இறந்தவர்களுக்கு உடனடியாக பங்கு தொகையுடன், அரசின் பங்கும்சேர்த்து தொகை வழங்கிட அரசாணை இரண்டு நாட்களுக்குள்வெளியிட உறுதி
3. சி.பி.எஸ். திட்டத்தை பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்றஅமைக்கப்படவுள்ள குழு உறுப்பினர்களின் பட்டியல் விரைவில்வெளியிட உறுதி.
4. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் குறித்து விரிவானஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் தற்பொழுது உள்ள சூழலில்இயலவில்லையென்றால் 7வது ஊதியக்குழுவில் இக்குறைகள்களையப்படும் வண்ணம் உடனடியாக குழு உறுப்பினர்களைஅறிவிப்பது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இயக்கத்தின் பிரதானகோரிக்கையான இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்தில்அதிக கவனம் கொடுக்கப்பட வேண்டும் என நமது சார்பில் அழுத்தம்கொடுக்கப்பட்டுள்ளது.
5.வேலைநிறுத்த நாட்களில் ஊதியம் பிடித்தம் இல்லையெனவும்,அதை முறைப்படுத்திடவும் ஆணை வழங்கப்படும் எனவும் உறுதிஅளிக்கப்பட்டது
அலைபேசி வழி தகவல்: திரு.ச.மோசஸ், மாநிலத் தலைவர்
பகிர்வு: திரு.ஆ.முத்துப்பாண்டியன், சிவகங்கை மாவட்டச் செயலாளர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...