தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஆசிரியர்
தகுதி தேர்வை நீக்க கோரி மனித சங்கிலி போராட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே நடந்த மனித சங்கிலி போராட்டத் திற்கு தொடக்க, நடுநிலை பள்ளி மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர்
பாலன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சுந்தரமூர்த்தி, அமைப்பு
செயலாளர் முருகன் கண்டன உரையாற்றினர்.
ஆறாவது ஊதியக்குழுவில், தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய
அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி
தேர்வை நீக்கி, பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்தல்
உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடந்தது. புதிய பஸ்
நிலையத்திலிருந்து நான்கு முனை சிக்னல் வரை நடந்த, மனித சங்கிலி
போராட்டத்தில் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
tet la pass panninavangalukku posting pottutu appurama seniority la podunga....
ReplyDeleteilla tet la pona all teschers um job vittu thookkunga