தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ சார்பாக, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, மனித
சங்கிலி போராட்டம் நடந்தது.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்,
வரும், 25ம் தேதி சட்டசபை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு
செய்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கபள்ளிஆசிரியர் சங்க மாநில தலைவர் காமராஜ்
கூறியதாவது: மத்திய அரசு வழங்குவது போல், தமிழக அரசு ஆசிரியர்களுக்கு
ஊதியம் வழங்க வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய
வேண்டும். தமிழ்பாடத்தை முதல் பாடமாக முன்னிலைப்படுத்த வேண்டும். ஆசிரியர்
தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு நியாயமான
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ கூட்டமைப்பு தொடர்ந்து பல்வேறு
போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று (நேற்று) தமிழக
அளவில் எங்கள் அமைப்பு சார்பாக, மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறோம்.
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன் வராவிட்டால், வரும், 25ம்
தேதி, தமிழக சட்டசபை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதை
தொடர்ந்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவு
செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...