பொதுத்தேர்வில் குளறுபடி ஏற்பட்டால், அரசியல் கட்சிகள் அதை விஸ்வரூபமாக்கி, அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், கவனத்துடன்
பணியாற்றுமாறு, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரித்துள்ளது.
மார்ச், 4ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு, 15ல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
துவங்குகிறது. தேர்வு மையங்கள் அமைத்தல், தேர்வறை முதன்மை
கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை மேற்பார்வையாளர்கள், பறக்கும்படை அமைத்தல்
போன்ற பணியை, கல்வித்துறை துரிதப்படுத்தியுள்ளது. தேர்வு விதிமுறையை
சார்ந்தும், தேர்வுகால நடவடிக்கை குறித்தும், கல்வித்துறை மூலம் தலைமை
ஆசிரியர்கள், தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் துறை
அலுவலர்களுக்கு, பல்வேறு உத்தரவுகளை அரசு அவ்வப்போது பிறப்பித்து வருகிறது.
வரும் மே மாதம், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பொதுத்தேர்வு சார்ந்த
பணிகளில், கூடுதல் கவனம் செலுத்தி, உஷாராக செயல்பட வேண்டும். கடந்தாண்டில்,
தேர்வறை கண்காணிப்பாளர் ஆள் மாறாட்டம், "வாட்ஸ்-அப்' வாயிலாக வினாத்தாள்
பரிமாற்றம் போன்ற முறைகேடு நடந்ததால், பொதுத்தேர்வு குறித்த பல்வேறு
சர்ச்சை எழுந்தது.
இம்முறை, எந்த சர்ச்சைக்கும் இடமளிக்காமல், சிறப்பாக நடத்தி முடிக்க
வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பொதுத்தேர்வு நேரத்தில், ஏதேனும் குளறுபடியோ, முறைகேடோ நடந்தால், அது,
பல்வேறு விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்; "வாட்ஸ்-அப்' மற்றும்
"பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அரசுக்கு
அவப்பெயர்
ஏற்படுத்தும் விதமாக, எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் பரப்ப அதிக
வாய்ப்புள்ளது.எனவே, பொதுத்தேர்வை, சீரிய முறையில் கண்காணித்து எவ்வித
தவறும் நடக்காமல், முறைகேடுக்கும் இடமளிக்காமல் சிறப்பாக செய்து முடிக்க
வேண்டும்; ஏதேனும் பிரச்னை ஏற்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட மைய
கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என, வாய்மொழி உத்தரவாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...