அண்ணா பல்கலையில், ஒரே மாதத்தில், 130 காலியிடங்களை நிரப்ப, 10
அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதனால், தற்காலிக பணியாளர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற நிலையில்,
அரசின் பல துறைகளில், காலியிடங்களை நிரப்பும் பணி அவசர கதியில் நடக்கிறது.
அண்ணா பல்கலையில், 130 காலியிடங்களை நிரப்ப, ஜனவரியில் மட்டும், 10
அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. குறுகிய கால இடைவெளியில் அறிவிப்பு
வெளியிடப்பட்டு, ஆட்களை தேர்வு செய்யும் பணி, தினமும் நடக்கிறது.
இதேபோல, உதவி பேராசிரியர்களை தேர்வு செய்யும் பணியும், அவசர கதியில்
நடக்கிறது. பல்கலையின் கீழ் உள்ள அரசு கல்லுாரிகளில், இளநிலை உதவியாளர்கள்,
45 பேர்; அலுவலக உதவியாளர்கள், 75 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட
உள்ளனர். இந்த அறிவிப்பு, ஜன., 13ல் வெளியாகி, ஜன., 29 வரை விண்ணப்பங்கள்
பெறப்பட்டுள்ளன. அலுவலக உதவியாளருக்கு, 8ம் வகுப்பு; இளநிலை உதவியாளருக்கு
பட்டப்படிப்பு, கல்வி த்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பதவியை பெற,
ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். பலர், அரசியல்வாதிகள் மற்றும்
இடைத்தரகர்கள் மூலம், அண்ணா பல்கலையை அணுகியுள்ளனர்.
இதேபோல், அண்ணா பல்கலையின், 10 துறைகளில், 13 ஆய்வு உதவி அலுவலர் பணிக்கும்
அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன், அண்ணா பல்கலை
மற்றும் மண்டல அலுவலகங்கள் மூலம், இன்ஜி., கல்லுாரிகளில் தற்காலிகமாக
நியமிக்கப்பட்ட, 300 அலுவலக உதவியாளர்கள் இன்னும் பணி நிரந்தரம்
செய்யப்படவில்லை. தற்போது, புதிய ஆட்களை நியமிப்பதால், தங்கள் கதி என்ன
ஆகுமோ என, தற்காலிக பணியாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...