Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும்.

           தமிழகத்தில் உள்ள 83 அரசு கல்லூரிகளில் சுமார் 3600 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 
          இவர்களில் பெரும்பான்மையானோர் 2002–ம் ஆண்டு முதலும், பலர் 1996–ம்ஆண்டிலிருந்தும் இந்த பணியில் உள்ளனர். எம்.பில். முதல் முனைவர் பட்டம் வரை கல்வித்தகுதி பெற்றுள்ள இவர்களுக்கு மாதத்திற்கு ரூ.10,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் ஆண்டுக்கு 10 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியம் போதுமானதல்ல என்பதால் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின்படி ரூ.25 ஆயிரம் மாத ஊதியம் வழங்க வேண்டும். கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் படிப்படியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பல ஆண்டுகளாக இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தொழில் பயிற்சி பெறாத தொழிலாளர்கள் கூட மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை எளிதாக வருவாய் ஈட்டுகிறார்கள். இத்தகைய சூழலில் தமிழக அரசும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாத ஊதியத்தை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதுதான் சரியானதாக இருக்கும். அதுமட்டுமின்றி 20 ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களாகவே இருந்து வாழ்க்கையின் பெரும்பகுதியை தொலைத்து விட்ட அவர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பணி நிலைப்பு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ._அன்புமணிராமதாஸ் பாமக




1 Comments:

  1. only special competitive exam is the way.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive