Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுத்திறனாளிகளுக்காக சலுகைகளை அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா


       தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடி வரும் மாற்றுத்திறனாளிகளுக்காக சில முக்கிய சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஆற்றிய உரையில்,மாற்றுத் திறனாளிகளை சமுதாயத்தில் ஓர் அங்கமாக அனைவரும் ஏற்பதற்கும், வளர்ச்சியில்  மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழு பங்கேற்பை உறுதி செய்வதற்கும் வகை செய்யும் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத் திறனாளிகள் மேலும் சில சலுகைகள் கேட்டு அரசுக்கு கோரிக்கைகள் வைத்துள்ளனர்.  இதன் அடிப்படையில்தற்போது  சில சலுகைகளை அறிவிக்க விரும்புகிறேன்.
1. தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கு குறைபாட்டின் அளவு 60 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இது 40 சதவீதம் என குறைக்கப்படும். இதனால்,  40 சதவீதம் குறைபாடு உள்ள மாற்று திறனாளிகளும் ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித் தொகை பெற இயலும்.
2.  மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகள் ஆதரவற்றோர் என்ற நிலையில் இருக்க வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. எவ்வித வருவாய் இல்லாதவராகவும், 50,000 ரூபாய்க்கு அதிகமான சொத்துகள் இல்லாதவராகவும், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள 20 வயதுக்கு மேற்பட்ட  மகன், மகனின் மகன் அதாவது பேரன், கணவர் அல்லது மனைவி இல்லாதவரே  ஆதரவற்றோர் என வரையறுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளை பொறுத்தவரை ஆதரவற்றோராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படும்.  அதாவது, வேலை வாய்ப்பற்ற 40 சதவீதத்திற்கு மேல் குறைபாடுள்ள,  மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவர்.
3. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.  இந்த இட ஓதுக்கீட்டை அரசு தவறாமல் கடைபிடித்து வருகிறது.  எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், இதுவரை 5,633 மாற்றுத் திறனாளிகள் அரசு மற்றும் அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீடு முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தலைமைச் செயலாளர் தலைமையில் உள்ள உயர்மட்டக் குழு கண்காணித்து வருகிறது.
4. மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு திட்டங்களை கண்காணிக்கவும், அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கவும் சமூக நலத்துறை அமைச்சரை தலைவராகக் கொண்ட மாநில ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்படும்.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒளி ஏற்றும் என தமிழதுக அரசு திடமாக நம்புகிறது என்று தெரிவித்தார்.




3 Comments:

  1. ஸ்டாலின் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

    நாள் :22/02/2016
    இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில்

    மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் வாரீர்! வாரீர் !!வாரீர் !!!




    அரசானை எண் :193,46,169,170ல் மொத்தம் 2054+2064+3816+1242=9176 பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும். இப்பணியிடங்களை நிரப்ப கோரி மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் .

    தொடர்புக்கு

    இரத்தினகுமார் :9362778448

    அய்யாதுரை :9443987601
    www.jobs-edn.blogspot.com

    ReplyDelete
  2. அப்பாடா..!சட்டமன்ற மேசைகளுக்கெல்லாம்,விடிவு காலம் பொறாந்தாச்சு..!

    ReplyDelete
  3. அப்பாடா..!சட்டமன்ற மேசைகளுக்கெல்லாம்,விடிவு காலம் பொறாந்தாச்சு..!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive