Home »
» கல்வி உதவித் தொகை: மின்னஞ்சலில் புகார் அனுப்பலாம்
மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெறும்போது ஏற்படும்பிரச்னைகள் குறித்து புகார்களை மின்னஞ்சலில் தெரிவிக்கும் வசதியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பொருளாதாரத்தில் நலிந்த பிரினர் உயர் கல்வி பெற கல்விஉதவித்தொகையை மத்திய அரசு வழங்கிவருகிறது.
இவற்றைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள், குறைபாடுகள் குறித்த புகார்களை scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.இந்த நிலையில், மத்தியப் பிரிவு கல்வித் தொகைகள் குறித்த புகார்களை schol-mhrd@gov.in என்ற மின்னஞ்சலுக்கும், ஏஐசிடிஇயின் கல்வி உதவித் தொகை தொடர்பான புகார்களை pgscholarship@aicte-india.org என்ற மின்னஞ்சலுக்கும், யுஜிசி கல்வி உதவித் தொகை தொடர்பான புகார்களை ugcfellowship@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மத்திய மனிதவளமேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...