தமிழகத்தில்
உள்ள, 650 பி.எட்., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்தும், இன்னும்
பல்கலையால் இணைப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. சான்றிதழ் வழங்க,
விதிமுறைகளை மீறி, சிலர் வசூல் வேட்டை நடத்துவதாக புகார்
எழுந்துள்ளது.தமிழகத்திலுள்ள, 650 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில்,
பி.எட்., - எம்.எட்., டிப்ளமோ கல்வியியல் படிப்பும்கற்று தரப்படுகின்றன.
இந்த கல்லுாரிகள் தேசிய கல்வியியல் பயிற்சி கவுன்சிலான என்.சி.டி.இ.,யின்
அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு
பெற்று நடக்கின்றன.
நடப்பு ஆண்டில், பி.எட்., படிப்பு காலம், இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டதால், மாணவர் சேர்க்கை மிக குறைவாகவே இருந்தது. ஆனாலும், கல்லுாரிகளின் இணைப்பு சான்றிதழுக்கு, அரசியல்வாதிகள் வசூல் வேட்டை நடத்தி, பல்கலைக்கு இடைத்தரகராக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன், தனியார் கல்லுாரி முதல்வர்கள், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். மாணவர் சேர்க்கை அங்கீகாரம் வழங்க, பல்கலை அதிகாரிகள் பெயரில், சில கல்லுாரி சங்கங்கள் வசூல் வேட்டை நடத்துவதாக அவர்கள் பகிரங்கமாக புகார் அளித்தனர். ஆனாலும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாணவர் சேர்க்கை முடிந்து, பாடம் எடுக்கப்படும் நிலையில், பி.எட்., கல்லுாரிக்கு தமிழக ஆசிரியர் பல்கலையில், இன்னும் இணைப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதை பெற்று தருவதாக கூறி, தனியார் கல்லுாரிகளை சேர்ந்த சில சங்கத்தினர், கல்லுாரி முதல்வர்களிடம், சென்னையில் உள்ள, ஒரு ஓட்டல் அறையில் முகாமிட்டு வசூல் வேட்டை
நடத்துவதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக, பதிவாளர், உயர்கல்வி துறைக்கு புகார்கள் சென்றுள்ளன.கல்லுாரி முதல்வர்கள் சிலர் கூறும்போது, 'பல கல்லுாரிகளில் உட்கட்டமைப்பு வசதி இல்லை; யு.ஜி.சி., விதிமுறைபடி, பிஎச்.டி., முடித்த முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் இல்லாமல் பாடம் நடத்தப்படுகிறது.
'இந்த கல்லுாரிகளுக்கு முறைகேடாக இணைப்பு சான்றிதழ் வழங்க, அரசியல்வாதிகளும், சில கல்லுாரி நிர்வாகத்தினரும் பேரம் பேசி வருகின்றனர். எனவே, அந்த கல்லுாரியின் சான்றிதழ்களுக்கு மதிப்பு இருக்குமா என மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்' என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...