பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடம் நீட்டிப்பு; 1,880 பேர் நிம்மதிபள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடம் நீட்டிப்பு; 1,880 பேர் நிம்மதி
அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வியை பயிற்றுவிக்க, 2006 ல் 1,880
கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்கள் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டன.
தற்காலிக பணியிடம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பணி நீட்டிப்பு செய்தால்
மட்டுமே கம்ப்யூட்டர் பயிற்றுனர்கள் ஊதியம் பெற முடியும்.பணி நீட்டிப்பு 2015 டிச., 31 னுடன் காலாவதியானது.
நீட்டிப்பு ஆணை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் பயிற்றுனர்கள் ஊதியம்
பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்காலிக பணியிடங்களை நிரந்தரப்படுத்துவது
குறித்து நிதித்துறை பரிசீலனையில் உள்ளது என கூறி, 2016 டிச., 31 வரை
ஓராண்டிற்கு மட்டும் பணியிடங்களை அரசு நீட்டிப்பு செய்துள்ளது. இதனால்
ஆயிரத்து 188௦ பேர் நிம்மதி அடைந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...