Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வர்கள் கடும் அதிர்ச்சி:'செட்' தேர்வு வினாத்தாள் எடுத்து வர தடை

       உதவிப் பேராசிரியர்களுக்கான, மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வின் இறுதியில், தேர்வர்கள் வினாத்தாள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
          கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான மாநில தகுதித் தேர்வான, செட் தேர்வு நேற்று நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடைமுறைப்படி, தேர்வர்களுக்கு இலவச கறுப்பு, 'பால்பாய்ன்ட்' பேனா வழங்கப்பட்டது; மொபைல் போன்கள் தேர்வறையில் தனியாக வைக்கப்பட்டன.

மொத்தம் மூன்று தாள்கள் அடங்கிய தேர்வு, காலை, 9:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை, மூன்று கட்டங்களாக நடந்தது. ஆங்கிலம் மற்றும் தமிழில் வினாத்தாள்கள் இருந்தன.
'ப்ளூ பிரின்ட்' படி, கேள்விகள் இடம்பெறவில்லை. நான்கு வகை வினாத்தாளுக்கு பதில், ஒரே வினாத்தாளே வழங்கியதால், தேர்வர்கள், 'காப்பி'யடிக்க வாய்ப்பாக இருந்தது; தேர்வறை சோதனைக்கு, பறக்கும் படை அமைக்கவில்லை.
நெட் தேர்வை போல், செட் தேர்விலும் விடைத்தாள் நகல் வழங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது; இதுகுறித்து தேர்வு மையத்தில் எந்த அறிவிப்பும் இல்லை; தேர்வு முடிந்ததும் விடைத்தாளுடன் வினாத்தாளையும் எடுத்துச் சென்றதால், தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
'வாட்ச்' அணிய தடை:வினாத்தாளை வெளியே கொண்டு வர அனுமதிக்கவில்லை. அதனால், மாணவர்கள் எதிர்காலத்தில் செட் தேர்வுக்கு தயாராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் நெட் தேர்வில் வினாத்தாளுடன் விடைத்தாள் நகலும் வழங்கப்படும். ஆனால், இந்த தேர்வில் அப்படி வழங்கவில்லை.- மணிகண்டன், தேர்வர்
தேர்வு மையங்களை, நேற்று முன்தினம் இரவோடு இரவாக மாற்றியதால், தேர்வு மையம் தெரியாமல் தேர்வர்கள் தவித்தனர். காலையில் தேர்வு
துவங்குவதற்குள், 'ஹால் டிக்கெட்' பிரின்ட் எடுக்க தேர்வர்கள் அவதிப்பட்டனர். ஞாயிற்றுக்
கிழமை என்பதால் இணையதள மையங்கள் கிடைக்காமல் பல தேர்வர்கள், தேர்வில் பங்கேற்க முடியவில்லை. தேர்வர்கள் வாட்ச் அணிய தடை விதிக்கப்பட்டது. ஆனால்,தேர்வறையில் கடிகாரம் இல்லாததால் பிறகு வாட்ச் அனுமதிக்கப்பட்டது.
தேர்வை அவசர கதியில் அறிவித்து நடத்தியதால், சில பிரச்னைகள் இருந்தன. வினாத்தாளில், தமிழ், ஆங்கில வினாக்களின் மொழி மாற்றத்தில் சில பிழைகள் இருந்தன. எனவே, 'கீ - ஆன்சர்' தயாரிக்கும் போது பிரச்னை ஏற்படலாம். அதை பல்கலை அதிகாரிகள் தற்போதே முன்னெச்சரிக்கையுடன் சரி செய்ய வேண்டும்.- சாமிநாதன், 'நெட், செட்' தேர்வர்கள் சங்க ஆலோசகர்




1 Comments:

  1. In paper-I, graph questions donot have details regarding x,y,z.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive