சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வை ஆதரிப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள்
கூட்டமைப்பு (டேக்டோ) மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் மீட்பு இயக்கம் அறிவித்துள்ளன.
இதன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:தமிழகத்தில் 2003
ஏப்.,௧ க்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பிரதான
கோரிக்கை, 'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை
அமல்படுத்த வேண்டும்' என்பது. புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவிற்கு தி.மு.க.,
ஆதரவளித்து, ஆசிரியர்களுக்கு துரோகம் செய்தது. அரசு ஊழியர்களை ஓட்டு
வங்கியாக மட்டுமே பயன்படுத்தியது.ஆனால் குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக
உயர்த்தியது, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 'கிரேடு-2' பதவி உயர்வுக்கான
கணக்கு தேர்வை ரத்து செய்தது உட்பட 'டேக்டோ'வின் பெரும்பாலான கோரிக்கைகள்
அ.தி.மு.க.,வின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் வரும்
தேர்தலில் அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை, 'டேக்டோ' மற்றும் பழைய
ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கம் அ.தி.மு.க.,வை ஆதரிக்கும்.இவ்வாறு
தெரிவித்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...