தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை எங்கு அமையவுள்ளது என்பது குறித்த
முறையான அறிவிப்பு, பார்லிமென்ட்டில், இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய
பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
'டில்லியில், அதிநவீன வசதிகளுடன் செயல்படும், எய்ம்ஸ் எனப்படும், அகில
இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் கிளை, தமிழகத்தில் அமைக்கப்படும்'
என, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, மதுரை, ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சை,
புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், தலா, 200 ஏக்கர் இடங்களை தமிழக அரசு
பரிந்துரைத்தது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் குழு, 2015 ஏப்., மாதம், ஐந்து
இடங்களையும் ஆய்வு செய்தது. அதில், 'ஈரோடு - பெருந்துறை; மதுரை - தோப்பூர்
என, இரண்டு இடங்கள், எய்ம்ஸ் மருத்துவமனை கிளை அமைக்க வசதி யாக உள்ளது' என,
அக்குழு தெரிவித்தது. எனினும், எய்ம்ஸ் கிளை எங்கு அமையும் என்ற,
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
தமிழகம் மட்டுமின்றி, மேலும், நான்கு மாநிலங்களிலும் இடங்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனை கிளை அமையும் இடம் குறித்த முறையான
அறிவிப்பு, இன்றைய மத்திய பட்ஜெட்டில் இடம்பெற லாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...