தேர்வுத் தாள் திருத்துவோரின் விவரங்களை, தகவல் உரிமைசட்டத்தின் கீழ்
பிறருக்கு தெரிவிக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கேரள
மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் எழுதப்பட்ட விடைத் தாள்களை
திருத்தியோர் விவரங்களை, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தரக் கோரி, கேரள
ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவைவிசாரித்த கேரள
ஐகோர்ட், திருத்தியோர் விவரங்களை வெளியிட உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், கேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மேல் முறையீடு செய்தது.மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், எம்.ஒய்.இக்பால், அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்வு விடைத்தாள்களை திருத்தியவர்கள் பற்றிய தகவல்களை, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிடத் தேவையில்லை என, உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...