இருவிதமான விலையில் இணைய சேவை வழங்குவதற்கு இந்திய தொலைதொடர்பு ஒழுங்காற்று
ஆணையம் (டிராய்) மறுப்பு தெரிவித்துள்ளது.இணையச் சேவை அளிக்கும்
நிறுவனங்களும், தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களும் ஒவ்வொரு
இணையதளத்தைப் பயன்படுத்தவும் வெவ்வேறு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்என
வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் சமநிலை இணையச் சேவையை உறுதி செய்ய வேண்டும்என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பலவித இயக்கங்களை நடத்தினர்.இதையடுத்து இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையை ஒழுங்குப்படுத்தும் டிராய் அமைப்பு, பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தியது.இந்நிலையில் சமநிலை இணையச் சேவை தொடர்பாக முடிவெடுப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியிருந்தனர்.இதையடுத்து டிராய் இன்று வெளியிட்ட அறிக்கையில், இணையச்சேவை வழங்கும் நிறுவனங்கள் இருவிதமான விலை நிர்ணயம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.இந்த தடையால் ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கவிருந்த 'ப்ரீ பேசிஸ்' திட்டத்த்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...