Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப்பள்ளி வகுப்பறைகளில் விரைவில் வண்ண வண்ண சித்திரங்கள் கற்பனை வளத்துடன் ஆங்கிலம் கற்பிக்க திட்டம்

     அரசுப்பள்ளி மாணவர்கள், ஆங்கிலத்தில், அசத்தும் வகையில், வகுப்பறைகளில், வண்ண ஓவியங்களை வரைந்து, கற்பித்தல் திறனை ஊக்குவிக்கும் புது திட்டம் கல்வித்துறையால், செயல்படுத்தப்பட்டுள்ளது. 
 
          மேகத்தில் மிதப்பது, நிலாவை பிடிப்பது என குழந்தைகளின் உலகம் என்றுமே, கற்பனை வளமும், வண்ணமயமான காட்சிகள் நிறைந்ததாகவே இருக்கும். ஆனால், பள்ளிக்குள் நுழைந்ததும், அவர்களின் உலகத்தை விட்டு வெளியேற்றி, தங்களுக்கான சூழலை இழப்பதாக கருதுகின்றனர் இன்றைய பள்ளி குழந்தைகள். கல்வி முறையில் மாற்றம் ஏற்பட்டாலும், அதை கற்பிக்கும் விதத்தில் புதுமையை எதிர்பார்க்கும் குழந்தைகளுக்கு ஏமாற்றமே.
புத்தகங்களில், பார்க்கும் வண்ண ஓவியங்களை, தங்களின் கற்பனை களத்தின் காட்சிகளாக படைப்பதற்குள், 'மெல்லக் கற்கும் குழந்தைகள்' என பலரும் முத்திரை குத்தப்படுகின்றனர். இன்னல்களுக்கிடையே, பிடித்த முறையில் பாடம் கற்க முடியாமல், படித்த பாடத்தையும் புரிந்துகொள்ள அவகாசம் அழிக்கப்படாத நிலையில்லாத கல்வி முறையில், மாற்றமாகவே வந்துள்ளது, வகுப்பறைகளில், வண்ண சுவர் சித்திரங்களை வரைதல் மூலமாக பாடம் நடத்தும் முறை.
தமிழ், ஆங்கிலம் உச்சரிப்பு பிரச்னை
தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் 'ஆல்பாஸ்' கல்வி முறையால், அரசு பள்ளி குழந்தைகளை வாட்டி வதைக்கும் இன்றைய பிரச்னையாக இருப்பது, தமிழ் மற்றும் ஆங்கிலம் உச்சரிப்புகள் தான். குழந்தைகளின் கற்பனை வளத்தை மேம்படுத்தும் 'படம் பார்த்து கதை வழக்கத்தை மீண்டும் குழந்தைகளிடையே கொண்டுவரும் முயற்சியாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும் முப்பது மாவட்டங்களில், குறிப்பிட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் இத்திட்டத்தை செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த கட்டட வசதி, மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகள், இப்பட்டியலில் இடம்
பெற்றுள்ளன.
எந்தெந்த பள்ளிகள் தேர்வு
உடுமலையில், சின்னவீரம்பட்டி, சின்னபூலாங்கிணறு, போடிபட்டி நடுநிலைப்பள்ளிகள், எலையமுத்துார், கரட்டூர் துவக்கப்பள்ளிகள், மடத்துக்குளம் ஒன்றியத்தில், மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், சாமராயப்பட்டி நடுநிலைப்பள்ளிகள், காரத்தொழுவு, மேற்கு கொமரலிங்கம் துவக்கப்பள்ளி, குடிமங்கலம் ஒன்றியத்தில் சோமவாரப்பட்டி, கோட்டமங்கலம், முருங்கபட்டி, புக்குளம், லிங்கமநாயக்கன்புதுார் நடுநிலைப்பள்ளிகள் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பதற்கான படங்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த ஓவியர்களைக்கொண்டு இப்பணிகளை செய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில், 16 படங்கள் அமையும் வகையில் ஓவியங்கள் இடம்பெற, ஒரு பள்ளிக்கு, 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive