முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால
பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.தமிழக சட்டப்பேரவையின் நடப்பு
ஆண்டுக்கான முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் கடந்த 20-ம் தேதி
தொடங்கியது.இதைத்தொடர்ந்து, ஆளுநர் உரை மீதான விவாதம் 23-ம் தேதி வரை
நடைபெற்றது. விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இதையடுத்து, மறுதேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 13-ம் தேதியுடன் முடி வடைகிறது. அதற்குள் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடத்தப்பட்டு, மே 20-க்குள் புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும். எனவே, அதிமுக தலைமையிலான தற்போதைய அரசு, தேர்தல் வரையிலான செலவுகளுக்காக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். அதனால், இடைக் கால பட்ஜெட் தயாரிக்கும் பணியில் நிதித்துறை மும்முரமாக ஈடுபட்டு வரு கிறது. பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய் யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து சில நாட்கள் பேரவை கூட்டத்தொடர் நடைபெறலாம்.
இந்நிலையில், முதல்வர் ஜெய லலிதா தலைமையில் தமிழக அமைச் சரவைக் கூட்டம் சென்னை கோட்டை யில் நேற்று காலை நடந்தது.கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா காலை11.45 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு வந்தார். 11.50 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 28 அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.பகல் 12.25 மணிக்கு கூட்டம் முடிவடைந்தது.பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்ஜெட் தாக்கலுக்கான தேதி, புதிய திட்டங்கள், மாநிலத்தின் தற்போதைய முக்கிய பிரச்சினைகள்உள்ளிட்டவை குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.பேரவைக்கு தேர்தல் வரவிருப்ப தால் இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படு கிறது.முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...