ஆசிரியர், அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்த்து நாமக்கல்லில் ஓய்வுபெற்ற
அரசு ஊழியர் அறப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அத்தனூர் சின்னப்பாவடி தெருவைச்
சேர்ந்தவர் லோகநாதன் (68). பொதுப் பணித் துறையில் உதவியாளராகப் பணிபுரிந்து
ஓய்வுபெற்றவர். இவர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை எதிர்த்து
நாமக்கல் பூங்கா சாலையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டார்.
அரசு ஊழியர்கள், அங்கன்வாடி, சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள்,
ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியல், உள்ளிருப்புப்
போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதை எதிர்த்து அறப்போராட்டத்தில்
ஈடுபட்டதாக லோகநாதன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
6-ஆவது ஊதியக் குழுவில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அதிகமாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் நல முன்னணி என்ற அரசியல் கட்சிகளின்
கூட்டமைப்பை நடத்தி வருகிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் ஆணையில் 6-ஆவது ஊதியக் குழு அறிக்கையை
திரும்பப் பெறுவோம். உலக வங்கியின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில்தான் அரசு
ஊழியர்களுக்கு ஊதியம் அதிகம். தமிழகத்தில் ஒரு அலுவலருக்கு ஆண்டு ஊதியம்
ரூ.20 லட்சம். இது ஒரு பேரூராட்சி வருமானத்தைவிட அதிகம். ஒரு ஆசிரியருக்கு
ஆண்டு ஊதியம் ரூ.9 லட்சம்.
இந்த அளவுக்கு அரசு ஊதியம் வழங்கிய போதும் எங்கு பார்த்தாலும் சட்ட
விரோதப் போராட்டம் நடக்கிறது. இதனால், போலீஸாருக்கு மிகுந்த பணிச் சுமை,
இதனால், அவர்கள் சமூக விரோத சக்திகள் மீது கவனம் செலுத்த முடியவில்லை
என்றார்.
நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் கைது பண்ணுங்கள் கதைதான். விளம்பர மோகம் யாரை விட்டது.
ReplyDeleteஆண்டு வருமானம் கணக்கு போட்டு சொல்லுவதை விட ஊழியரின் மொத்த பணிக்கால ஊதியத்தையும் கணக்கிட்டு சொன்ன படிக்கறவங்களுக்கு பெரிய தொகையா தெரியும் திரு. லோகநாதன்
ReplyDelete