Home »
» எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், வரும்
29-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கு, வரும் ஏப்.1-ஆம் தேதியன்று
பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக
தனித்தேர்வர்கள், பிப்.29-ஆம் தேதி மாலை 5 மணி வரை www.tndge.in என்ற
இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சிறப்பு மையங்களில் ஆன்லைன் மூலம் பதிவு
செய்ய வேண்டும்.
கட்டண விவரம்: தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு
கட்டணம் ரூ.50-ஐ தனித்தேர்வர்கள் சேவை மையங்களிலேயே நேரடியாகச்
செலுத்தலாம். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி
மாற்றுச் சான்றிதழ் நகல் பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல்
ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன்
மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம்
பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு
தேர்வுத்துறை இயக்ககத்தின் இணையதளத்தைப் பார்வையிடலாம் என்று அரசுத்
தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...