அரசு ஐடிஐயில் காலியாகவுள்ள பணிமனை உதவியாளர் பணியிடத்துக்கு
தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் கோவிந்தராஜ்
தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்ட
அறிக்கை:சென்னை, கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும்
அரசினர்தொடர் அறிவுரை மையம் ஆகியவற்றில் காலியாகவுள்ள பணிமனை உதவியாளர்
பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
நான்கு பிரிவுகளின் கீழ் (COPA, FITTER, MRAC, CUTTING AND TAILORING) பணிமனை உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.டெய்லரிங் பிரிவுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அனைத்து பிரிவுகளுக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொழில்பழகுநர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.07.2015 அன்று 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். (ஆதிதிராவிடர்35 வயது வரை). விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் பெயர், கல்வித்தகுதி, தொழில்நுட்ப கல்வி, சாதி விவரம்,முன் அனுபவ விவரம், முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் வரும் 10ம் தேதிக்குள், முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை-32 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
welcome your effort
ReplyDelete