Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு... 'மேக் இன் இந்தியா'வால் மாணவர்கள் உற்சாகம்:

        அனைத்து இன்ஜி., கல்லுாரிகளிலும், விருப்ப பாடமான சி.பி.சி.எஸ்., திட்டம் அறிமுகமாவதால், இன்ஜி., பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் இரட்டிப்பாகி உள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்வதும், இன்ஜி., துறைக்கு புத்துணர்வை அளித்துள்ளது.
 
      மாணவர்களுக்கு வழக்கமான பாடத்திட்டம் மட்டுமே கற்றுத் தராமல், தொழிற்துறைக்கு தேவையான பாடங்கள், தனித்திறன் கொண்ட பாடங்கள், ஆர்வமான பாடங்களையும் விருப்ப பாடமாக எடுத்து படிக்க, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய இன்ஜி., பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில், உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களை, பிரதமர் மோடியின், 'மேக் இன் இந்தியா' திட்டம் மூலம், மத்திய அரசு ஊக்குவிக்கிறது.இதை தொடர்ந்து வேலைவாய்ப்பை அதிகரிக்கும், சி.பி.சி.எஸ்., திட்டத்தை, தமிழகத்தில், அண்ணா பல்கலை அறிமுகம் செய்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அனைத்து இன்ஜி., கல்லுாரிகளும், வரும் கல்வி ஆண்டில், சி.பி.சி.எஸ்., திட்டத்தை கொண்டு வர, அண்ணா பல்கலை கடிதம் அனுப்பியுள்ளது.
அதிகரிப்பு:
இதுகுறித்து அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் கூறுகையில், ''மாணவர்கள் எந்த பாடத்தில் ஆர்வமாக உள்ளனரோ அதையும் அவர்கள் படிக்கும் வகையில், சி.பி.சி.எஸ்., திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், அனைத்து மாணவர்களுக்கும், கூடுதலாக சில பாடங்களை படிப்பதன் மூலம், அவர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கிறது,'' என்றார்.

அதேநேரம், இன்ஜி., படிப்பில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு, 'கேம்பஸ் இன்டர்வியூ' என்ற வளாக நேர்காணலில், அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், புதிதாக தொழிற்சாலைகள் துவங்குவதும், வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக முதலீடுகளை இந்தியாவுக்கு கொண்டு வருவதும் இன்ஜி., துறையில் புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது.
35 லட்சம் பேர்:
'இ-காமர்ஸ்' எனப்படும், இணைய வர்த்தக நிறுவனங்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதற்கு, 'ஸ்டார்ட் அப்' எனும் சிறிய அளவிலான இணைய வர்த்தக நிறுவனங்களும் வேகமாக பெருகி வருவது முக்கிய காரணம். இதை கருத்தில் கொண்டு,
'அசோசெம்' எனப்படும், தேசிய தொழில் வர்த்தக அமைப்பு, இத்துறையில் உருவாக்க கூடிய வேலைவாய்ப்புகள் பற்றிய ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டு, அது பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
அதில், பெரும்பாலான வர்த்தக இணையதளங்களின் எண்ணிக்கையும், அவற்றின் வணிகமும் கணிசமான அளவு அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. மொபைல் போன்கள் அதிகரிப்பால், 'எம்-காமர்ஸ்' என்னும் மொபைல் போன் வழி வர்த்தகமும் அதிகரித்து வருகிறது.இதுபோன்ற காரணங்களால், இ-காமர்ஸ், எம்-காமர்ஸ் மற்றும் அது சார்ந்த சில்லரை விற்பனை நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த அறிக்கையை வெளியிடும்போது, 'அசோசெம்' தலைவர் டி.எஸ். ராவத் கூறியதாவது: இ-காமர்ஸ் வர்த்தக நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, 60 - 65 சதவீதம் அதிகரிக்க உள்ளது. இதன் மூலம், 58 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் உருவாகும். அதுமட்டுமின்றி, இ-காமர்ஸ் சார்ந்த வினியோகம், வீட்டுக்கு வீடு டெலிவரி, வாடிக்கையாளர் உதவி மையம் மற்றும் புதிய இணையதளங்களை உருவாக்குவோரின் தேவையும், பயன்பாடும் அதிகரிக்கும். இந்திய இணைய வர்த்தகத்தை பொறுத்தவரையில், எம் - காமர்ஸின் பங்கு, 20 - 25 சதவீதமாக உள்ளது. இதில், 'கால் - டாக்சி'கள், உணவகங்கள், போன்றவற்றில் மொபைல்போன் வழி பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. மொபைல் போன்களில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் உயர்ந்துவருவதும், 'பே.டி.எம்.,' போன்ற பணம் செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், வாடிக்கையாளரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகும். இந்தியாவில், 2009ல், 22 ஆயிரத்து, 800 கோடி ரூபாயாக இருந்த, இணைய வர்த்தகம், 2014ல், 10 லட்சத்து, 20 ஆயிரம் கோடியாகவும், 2015ல், 13 லட்சத்து 80 ஆயிரம் கோடியாவும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.அதுவே, 2016 முடிவில், 2.28 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளோம். உலகிலேயே மிகப்பெரிய இணைய வர்த்தகச்சந்தையாக உருவெடுத்துள்ள இந்தியாவில், இத்துறையில், 12 மாதங்களில், 35 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்கள் கவனம்:
இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு அடுத்த சில ஆண்டுகளில், பல துறைகளிலும் வேலை




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive