பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, 2011 தேர்தல் அறிக்கையில், அ.தி.மு.க., அறிவித்தது. அக்கோரிக்கைகளை நிறைவேற்ற, தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடக்கும் தீவிர போராட்டம் சரியா என, கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, இரு தரப்பு கருத்துக்கள் இதோ:
தேர்தல் நேரத்தில் தீவிர போராட்டம் நடத்தி, அரசை பணியவைத்து விடலாம் என்ற எண்ணத்தில், நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளாக, தொடர் போராட்டங்களை நடத்தியே வந்துள்ளோம். அதெல்லாம் அரசின் காதுகளை எட்டவில்லை. இப்போதைய போராட்டத்துக்கு எங்களை தள்ளியது அரசு தான். நான்கு ஆண்டுகளாக போராட்டத்தை தீவிரப்படுத்தாமல் இருந்ததற்கு, 2011 தேர்தலின் போது, அ.தி.மு.க., அளித்தவாக்குறுதியை நிறைவேற்றி விடும் என நம்பினோம். ஆனால்,அரசு எங்களை ஏமாற்றி விட்டது.எதிர்கால உத்தரவாதம் இல்லாத பணியை, அரசுத் துறைகளில் புகுத்தி, கீழ் மட்டத்திலிருந்து, மேல்மட்டம் வரை, ஊழலைஊக்குவிக்கும் வகையில், அரசே துணை நிற்கிறது. நிர்வாகச் சீர்கேடுகள் அதிகரிக்க, அரசின் கொள்கையும், அணுகுமுறையுமே காரணம்.
அரசின் அனைத்து திட்டங்களையும் செம்மையாக செயல்படுத்தி, அரசுக்கு நல்ல பெயர் பெற்றுத் தர, அரசு பணியாளர்கள் தேவை. ஆனால், அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற, அரசு தயாராக இல்லை. தேர்தல் பணியை முடக்குவது எங்கள் நோக்கமல்ல; எங்கள் நியாயத்தை பெறுவதே இலக்கு. கு.பாலசுப்ரமணியம்பொது செயலர், அரசு பணியாளர் சங்கம்தேர்தல் காலத்தில், அரசு ஊழியர்களை ஏவி விட்டு, மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என, எதிர்க்கட்சிகள் செய்யும் செயல் தான், இந்தப் போராட்டம். அரசு ஊழியர் போராட்டத்தை துாண்டுவதற்கு காசும், காலமும் செலவிடுபவர்கள், அதனால் எந்தப் பயனையும் பெறப்போவதில்லை. கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில், பல லட்சம் பேருக்கு வேலை அளிக்கப்பட்டு உள்ளது. அரசு ஊழியர் உட்பட, தமிழகத்தின் அனைத்து இளைஞர் களுக்கும் நம்பிக்கை ஊட்டும் விதித்தில் அரசு செயல்பட்டு உள்ளது.புதிய ஓய்வூதியத் திட்டத்தை, அ.தி.மு.க., அரசு அமல்படுத்தவில்லை. முந்தைய அரசு தான் செயல்படுத்தியது.அதை சரி செய்யத்தான், 2011தேர்தல்அறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என, அறிவித்தோம்.
அரசிடம் போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலை யில், இந்நடவடிக்கையை, உடனடியாக எடுக்க முடியவில்லை. அடுத்த, ஐந்து ஆண்டு களில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றினால் போச்சு. நாஞ்சில் சம்பத்பேச்சாளர், அ.தி.மு.க.,
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...