மணப்பாறையில் சகோதரர் கொலை செய்யப்பட்டதால், அவரது சகோதரிக்கு அரசு பணி
நியமனம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்சி மாவட்டம்
மணப்பாறை சுதா, 'எனது சகோதரர் முத்துக்குமார் 2015 ஏப்.,26ல் கொலை
செய்யப்பட்டார்.நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள்.
விதிகள்படி,எனக்கு கருணை பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.நீதிபதி டி.ஹரிபரந்தாமன் உத்தரவு: தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு விதிகள்படி, 3மாதங்களில் அரசு வேலை அல்லது நிலம் அல்லது வீடு வழங்க வேண்டும். அல்லது குழந்தைகளுக்கு கல்விக்கான முழு செலவையும் அரசு ஏற்க வேண்டும். மனுதாரருக்கு 4 வாரங்களில் பணி வழங்க உள்துறை செயலர், திருச்சி கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மனுதாரர் வழக்கறிஞர் ராகுல் ஆஜரானார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...