பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல் ஒன்று, மார்ச் மாதத்தில்
பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பூமியை கடந்து
செல்லுமா அல்லது தாக்குமா என்பதை கணிக்க முடியாமல், விஞ்ஞானிகள் அச்சத்தில்
உள்ளனர்.
ஒரு கிலோ மீட்டர் அகலமுள்ள அந்த விண்கல், நிலாவை விட 21 மடங்கு பெரிய அளவில் பூமியை கடந்து செல்லும் என்று கூறப்படுகிறது.
ஒரு வேளை, அந்த விண்கல் பூமியில் விழுந்தால், அது பூமியில் சுமார் 15 கிலோ
மீட்டர் அகலத்துக்கு பள்ளத்தை ஏற்படுத்தும், இதனால் ஏற்படும் தூசு, வளி
மண்டலத்தில் நிரம்பிவிடும். இந்த புகை சுமார் பத்து ஆண்டுகளுக்கு வானிலேயே
இருக்கலாம். இது பூமியில் படிய 5க்கும் மேற்பட்ட ஆண்டுகள் எடுத்துக்
கொள்ளும்.
இந்த தூசு மண்டலத்தால் பூமி மீது சூரியக் கதிர் விழுவது குறையலாம், மழை 50
சதவீதமாகக் குறையலாம், பூமியில் பனியுகம் கூட ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள்
எச்சரித்துள்ளனர்.
பாலைவனத்தைத் தவிர வேறு எங்கு விழுந்தாலும், மிகப்பெரிய தீப்பிழம்பு ஏற்படும் என்றும் அஞ்சப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...