சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ‘பேஸ்புக்’ இந்தியர்களிடையே செலுத்திவரும் இணைய ஆதிக்கத்தை முடிவுக்குகொண்டுவரும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ட்ரூ இன்டியன்’ வலைத்தளப் பக்கம் இன்று அறிமுகம் ஆகிறது.
பீகார் மாநில நிதிமந்திரி ஜகநாத் மிஸ்ராவின் மகனான மணிஷ் மிஸ்ரா தலைமையிலான இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவால் இயக்கப்படவுள்ள ‘ட்ரூ இன்டியன்’ சமூகவலைத்தளமானது, இந்திய சமூகத்தில் உள்ள பன்முகத்தன்மை, சமவாய்ப்பு, சமூகநீதியை பிரதிபலிக்கும் வகையில் திகழும் என இந்த வலைத்தளப் பக்கத்தை தொடங்கி, நிர்வகிக்கவுள்ள ‘பிரண்ட்ஸ் ஃபார் லைப்’ தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய ஃபேஸ் புக் நிர்வாகத்தின் செயல்பாடுகள் முன்னர் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனியின் நடவடிக்கைகளுக்கு ஒப்பானதாக அமைந்துள்ளதாக குற்றம்சாட்டும் ‘பிரண்ட்ஸ் ஃபார் லைப்’ தொண்டு நிறுவனம், தனது சுயலாபம், தனது முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் லாபம் என்ற வர்த்தக நோக்கத்தில் 21-ம் நூற்றாண்டின் கிழக்கிந்திய கம்பெனியைப்போல் செயல்படும் பேஸ்புக் (ஆர்குட்டை பேஸ்புக் வீழ்த்தியதைப்போல்) இன்னும் ஐந்தாண்டுகளில் இந்தியர்களிடையே செல்வாக்கை இழக்கும் வகையில் ‘ட்ரூ இன்டியன்’ வலைத்தளப் பக்கத்தின் செயல்பாடுகள் அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Law education must be need from sixth std to +2 level
ReplyDelete