'முதல்வரின் அறிவிப்பு கண்துடைப்பு; போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி'
என, தெரிவித்துள்ள ஆசிரியர், ஊழியர் சங்கங்கள் போராட்டத்தை
தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளன.
கண் துடைப்புஅரசுக்கு நிதி இழப்பு இல்லாத, தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக
மாற்றுவது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. பங்களிப்பு ஓய்வூதிய
திட்டத்திற்கான குழு எப்போது விசாரித்து, முடிவு எப்போது கிடைப்பது;
இது கண்துடைப்பு;
போராட்டத்தை திசை திருப்பும் செயல்.- பேட்ரிக் ரைமண்ட், பொது செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.
வெற்று வாக்குறுதி
''பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என, தேர்தல் அறிக்கையில்,
வாக்குறுதி அளித்து விட்டு, தற்போது குழு அமைப்போம் என்பது, வெற்று
வாக்குறுதி. மேலும், மத்திய அரசுக்கு இணையாக ஊதிய முரண்பாட்டை சரி செய்வது
பற்றி அரசு
மவுனமாக உள்ளதால், போராட்டம் தொடரும்.- சாமி சத்தியமூர்த்தி, தலைவர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்.
அரசுக்கு மனமில்லை
''அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை கூட அரசு ஏற்கவில்லை.
ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர அரசுக்கு மனமில்லை. எங்கள் போராட்டம்
நிற்காது; ஸ்டிரைக்கில்,'ஜாக்டோ' சங்கங்கள் ஒன்றிணைந்து வர வேண்டும்.-
கே.பி.ஓ.சுரேஷ், தலைவர், தமிழ்நாடு
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்.
சத்துணவு ஊழியர் ஏமாற்றம்
தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொள்ளாமல், சத்துணவு பணியாளர்களுக்கான
ஓய்வூதியம், ௧,௦௦௦ ரூபாயில் இருந்து, ௧,௫௦௦ ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் போது வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை உயர்வு என்பதும்,
யானைப்பசிக்கு சோளப்பொறியாக உள்ளது. பணி
நிரந்தர அறிவிப்போ, ஊதிய உயர்வோ இல்லை. பிப்., ௨௨ல், கூட்டமைப்பு கூடி,
அடுத்தக்கட்ட முடிவை எடுக்கும்.- வரதராஜன், மாநில அமைப்பாளர்,தமிழ்நாடு
சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...