சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், 9ம் வகுப்பு வரை அறிமுகம் செய்யப்பட்ட,
'கம்ப்யூட்டர் சயின்ஸ்' என்ற கணினி அறிவியல் பாடம், ஐந்து ஆண்டுகளாக
மாயமாகி விட்டது. அதனால், அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் புத்தகங்கள்,
பாடநுால் கழக கிடங்கில் மக்கி போகும் நிலையில் உள்ளன.தமிழகத்தில், 2011ல்,
சமச்சீர் கல்வி பாடத்திட்டம், 1ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை
அறிமுகமானது.
அப்போது, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றுடன், கணினி அறிவியல் பாடமும் அறிமுகம்செய்யப்பட்டது.முதலாம் ஆண்டில், கணினி அறிவியலுக்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட்டன. அடுத்து வந்த ஆண்டுகளில், கணினி அறிவியல் பாடமும், புத்தகமும் பள்ளிகளுக்கு வழங்கப்படாமல் மாயமாகின. இதற்காக அச்சடிக்கப்பட்ட புத்தகங்கங்கள், பாடநுால் கழக கிடங்கில் முடங்கி, கரையான் அரித்து மக்கும் நிலையில் உள்ளதாக தகவல்கள்வெளியாகி உள்ளன.அனைத்து தனியார் பள்ளிகளிலும், 1ம் வகுப்பு முதல், கணினி அறிவியல் பாடம் மற்றும், 'ஸ்மார்ட் க்ளாஸ்' என்ற கணினி வகுப்பு கண்டிப்பாக நடத்தப்படுகின்றன. அதனால், ௫ம் வகுப்பிலேயே, தனியார் பள்ளி மாணவர்கள், கணினி இயக்கத்தை கற்று, பள்ளி பாடங்களை, 'டிஜிட்டல்' வழியில் படிக்கவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.ஆனால், அரசு பள்ளிகளில், பிளஸ் 1ல் கணினி அறிவியல் என்ற பாடப்பிரிவை எடுத்தால் மட்டுமே கணினி இயக்குதல் குறித்து படிக்க முடியும். அதேநேரம், சில பள்ளிகளில் சிறப்பாசிரியர் என்ற அடிப்படையில், கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், பாடப் புத்தகமோ, முறையான வகுப்போ, தேர்வோ கிடையாது.
சான்றிதழை ஒப்படைக்க திட்டம்
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் குமரேசன் கூறியதாவது:தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட, 2,000 மேல்நிலைப் பள்ளிகளில், கணினி அறிவியல் பாடப்பிரிவே இல்லை. கணினி அறிவியலில், பி.எட்., முடித்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு எழுத முடியாது; கல்வி அதிகாரி பணிக்கான, ஏ.இ.ஓ., - டி.இ.ஓ., தேர்வையும் எழுத முடியாது.அதனால், 21 ஆயிரம் பேர் கணினி அறிவியல் முடித்து விட்டு, வேலையில்லாமல் தவிக்கிறோம்; போட்டித் தேர்வுக்கும் வாய்ப்பில்லை. எனவே, எங்கள் சான்றிதழ்களை அரசிடம்ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
govt please consider above request
ReplyDeletenominal roll, payroll,cps missing credit, mail
ReplyDeleteellathaiyum arampitchu computer operator posing illama govt school ellam centre la work mudikkiranga ithan 5 aandu sathanaiyaa
ennathuku B.Ed computer allow pannanga universityila posting illatha schoolukku
ReplyDeletenalla varumanam (enna oru makkal mel murpokku sinthanai)
21000 vottum nottavukke podunga yana nammatha entha listlayum illaye (vottu listlayavathu irukkuma)
ReplyDeleteவெ.குமரேசன்,மாநிலப் பொதுச்செயலாளர்,தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.பதிவு எண்:655/2014.9626545446.
ReplyDelete