மதுரை:"மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேர்வுக் குழு உறுப்பினர் ராமசாமி
தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை; அவர் மீது சட்ட
ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்," என கன்வீனர் முருகதாஸ்
தெரிவித்தார்.
இப்பல்கலைக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவிலுள்ள
உறுப்பினர்களில் ஒருவரான ராமசாமி, கவர்னர் பிரதிநிதியான கன்வீனர்
முருகதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, துணைவேந்தர் தேர்வில்
வெளிப்படை தன்மை இல்லை என தெரிவித்திருந்தார்.
மேலும் உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்துள்ளதாக நேற்று முன்தினம்
ராமசாமி அறிவித்தார்.இதுதொடர்பாக கன்வீனர் முருகதாஸ் நேற்று
கூறியதாவது:தேர்வுக் குழு பணி தொடர்பாக ராமசாமி தெரிவித்த
குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. அவர் எனக்கு ராஜினாமா கடிதம் அனுப்பவில்லை.
பல்கலை பதிவாளருக்கு தான் அனுப்பினார். தேர்வுக் குழு கூடிய நான்கு
கூட்டங்களிலும் அவர்
பங்கேற்றார். அதற்காக அவர் கையெழுத்திட்டு, உரிய பண சலுகைகளையும்
பெற்றுள்ளார்.தேர்வுக் குழுவிற்கு அவர் சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
அரசுக்கு எதிராக செயல்படும் சில அமைப்புகள் அவருக்கு பின்புலமாக உள்ளன.
தேர்வுக் குழு பணி குறித்து ரகசியம் காக்க வேண்டிய பல ஆவணங்களை அவர்
வெளியிட்டு உறுப்பினரின் தார்மீக கடமையில் இருந்து தவறியுள்ளார். இது
சட்டவிரோதமானது. என் மீது ஆதாரமின்றி தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்காக,
அவர் மீது வழக்கு தொடரவுள்ளேன், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...