மதுரையில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.) கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 'கட்டிங்' கொடுக்கும் பிரச்னையை சமாளிக்க முடியாமல் தலைமையாசிரியர்கள் திணறுகின்றனர்.
தலா ரூ.6.50 லட்சத்தில் குறைந்தபட்சம் 20க்கு 20 என்ற அளவில் ஒரு வகுப்பறை கட்டும் பணி நடக்கிறது.சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக (பி.டி.ஏ.,) தலைவர்தான் பணிகளை கண்காணித்து கட்டுமானத்திற்கான நிதியை செலவிட வேண்டும்.ஆனால், அப்பகுதி அரசியல் கட்சியினர் சிலர் 'பணிகள் நடக்கும் நிதியில் இருந்து தங்களுக்கு 'கட்டிங்' வேண்டும்,' என தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
'கட்டிங்' கொடுக்க முடியாமலும், அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் செய்ய முடியாமலும் தலைமையாசிரியர்கள் தவிக்கின்றனர்.விதிமீறல் : சில பகுதிகளில் விதிமீறி உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு கட்டுமான பணிகளை தலைமையாசிரியர்கள் வழங்கியுள்ளனர். இதன்மூலம் கட்சியினரை ஒப்பந்தக்காரர்கள் 'சமாளித்து' பணிகளை தொடர்கின்றனர்.
பாதிக்கப்பட்ட தலைமையாசிரியர்கள் கூறுகையில்,"வகுப்பறைகள் எவ்வாறு கட்ட வேண்டும் என்ற வரைபடம் அளிக்கப்படவில்லை. அரசியல்வாதிகளை 'சமாளிக்க' முடியவில்லை. அதிகாரியிடம் புகார் தெரிவித்தால் அது அந்த அரசியல்வாதிக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது," என்றனர். இத்திட்ட பணிகளை அதிகாரிகள் கண்காணித்து முறைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...