'பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விடைகளை அடித்தால், தேர்வு முடிவும் நிறுத்தப்படும்' என, அடுத்த எச்சரிக்கையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான விதிமுறைகளை, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
● முதன்மை விடைத்தாளின் பக்க எண்ணிக்கை, முகப்பு சீட்டிலுள்ள மாணவர் பெயர்,
பதிவு எண் மற்றும் புகைப்பட விவரங்களை சரிபார்க்க வேண்டும்
● தேர்வு எழுதும் மேஜை அல்லது பெஞ்சுக்கு அடியில், 'பிட்' எதுவும் இல்லை என்பதை தேர்வர்கள் உறுதி செய்ய வேண்டும்.
● விடைத்தாளின் எந்த பக்கத்திலும், தேர்வு எண், பெயர் விவரங்கள் எழுதக் கூடாது
● கூடுதல் விடைத்தாள் தேவைப்பட்டால், இரண்டு பக்கங்கள் காலியாக உள்ளபோதே கேட்டு வாங்க வேண்டும்
● தேர்வர்கள், ஒரு சில விடைகளை மட்டும் அடித்தால், 'இந்த விடைகள் என்னால்
அடிக்கப்பட்டது' என, தேர்வர்கள் பேனாவால் எழுதி, தங்கள் பதிவு எண் எதையும்
எழுத வேண்டாம்
● தேர்வர்கள் தான் எழுதிய அனைத்து விடைகளையும் முழுவதுமாக, தானே அடித்து
விடும் நிகழ்வு ஒழுங்கீன செயல். அப்படி செய்யும் மாணவர் மற்றும்
தனித்தேர்வரின் தேர்வு முடிவுகள் நிறுத்தம் செய்யப்படும். மேலும், அவர்கள்
அடுத்து வரும், இரண்டு பருவங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட
மாட்டார்கள். எனவே, தேர்வர்கள் தங்களின் அனைத்து விடைகளையும் அடிக்கக்
கூடாது.
இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையால், மாணவர்கள் பீதியடைந்துள்ளனர். மதிப்பீட்டை உயர்த்தும்
தேர்வும் இல்லாமல், 200க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்பும் தராமல்,
தேர்வுத்துறை அச்சமூட்டுவதாக, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...