ஆசிரியர்களின் கோரிக்கைகள் பற்றிய விளக்கங்களை நமது ஜாக்டோ உயர்மட்டத்
தலைவர்கள் தெளிவாக அனைத்தையும் கூறியதை கல்வித்துறை செயலரும், நிதித்துறை
செயலரும், அமைச்சர்களும் பொருமையாக கூர்ந்து கேட்டு அறிந்தனர்..
இந்தக் கூட்டம் 3 மணிநேரம் நடைபெற்றது..
அனைத்தையும் கனிவாக கேட்டறிந்த கல்வித்துறை செயலர் மதிப்பிற்குரிய சபிதா
அவர்கள் கோரிக்கைகள் விரைவில் பரிசீலனை செய்யப்பட்டு அது தொடர்பான
அறிவிப்பினை மாண்புமிகு முதல்வர் அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்று நமது
ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்களுக்கு உறுதியளித்தார்..
இறுதியாக நம்பிக்கையுடன் போராட்டத்தைக் கைவிட்டு பள்ளிப் பணிகளை
செய்திடுங்கள் என்று கூறி அமைச்சர்கள் தேநீர் விருந்தளித்ததுடன் கூட்டம்
இனிதே முடிவுற்றது..
அப்புடினு செய்தியை வெளியிட்டு (பச்சை துண்டை போர்த்திவிட்டு) ஜாக்டோவை கலைத்துவிடாதீர்கள் எனதருமை இயக்கத் தலைமைகளே..
கோரிக்கைகள் ஏற்கப்படாவிடில் அசுர வேகத்தில் உடனடியாக ஜாக்டீயாக
உருவெடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுப்பீர் என்ற நம்பிக்கையுடன் நாளை 5
மணிவரை அந்த நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம்..
இந்த மாத இறுதிவரை மட்டுமே நமது பாச்சா பளிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்..
மறந்துவிட வேண்டாம்..
பற்றி எரியக்கூடிய நமது முதல் இரண்டு கோரிக்கைகள் (CPS ரத்து மற்றும்
மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம்)
நிறைவேற்றப்படாவிடில் உடனடியாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவிப்போம்
என்று ஒருமனதான முடிவினை ஜாக்டோவின் 11 மணி கூட்டத்திலேயே தீர்மானம்
செய்துவிட்டு மாலை 4 மணிக்கு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றிடுக..
750 போல் ஒரு 250 தருகிறோம்
என்றதும் தொலைபேசியை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிடீதீர்கள்..
இந்த பிபி (personal pay) பிப்பிரிபீலாம் எங்களுக்கு வேண்டாம்..
ஊதியக்கட்டை டிப்பளமோ கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு 2800-ல் இருந்து 4200-ஆக மாற்றிட உறுதியான நிலைப்பாட்டுடன் சென்றிடுக..
உங்களின் உறுதியான நிலைப்பாட்டைப் பொறுத்தே..
ஆசிரியர்களின் வாழ்வாதாரம் உள்ளது...
-இவண்,
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன்,
தேவராஜன்,
தஞ்சாவூர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...