பி.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் எந்த மாற்றமும்
இல்லை என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர்
எஸ்.தங்கசாமி விளக்கம் அளித்தார்.
கடந்த கல்வி ஆண்டு வரையில் பிஎட், எம்எட்
படிப்புக் காலம் ஓராண்டாகத்தான் இருந்து வந்தது. இந்த நிலையில், தேசிய
ஆசிரியர் கல்விக்குழுவின் (என்சிடிஇ) 2014 விதிமுறைகளின்படி 2015-16-ம்
கல்வி ஆண்டிலிருந்து பிஎட், எம்எட் படிப்பு காலம் ஓராண்டிலிருந்து 2
ஆண்டுகளாக உயர்த்தப்பட்டன.
தமிழக அரசும் என்சிடிஇ விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில் பிஎட், எம்எட் படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு படித்து வருகின்றனர்.இதற்கிடையே, உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் நியமனம், படிப்புக்காலம் உள்ளிட்டவை தொடர்பாக என்சிடிஇ கொண்டு வந்த 2014-ம் ஆண்டு விதிமுறை களை எதிர்த்து தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அது நிலுவையில் இருந்து வருகிறது.
என்சிடிஇ உத்தரவாதம்
தற்போது, இந்த வழக்கில், நிபுணர் குழு விசாரித்து இறுதி முடிவு எடுக்கும் வரை 2014-ம் ஆண்டு விதிமுறைகளை பின்பற்றுமாறு கல்வியியல் கல்லூரிகளை வற்புறுத்த மாட்டோம் என்று உயர் நீதிமன்றத்தில் என்சிடிஇ உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே, பிஎட் படிப்புக்காலம் முன்பு இருந்து வந்ததைப் போன்று ஓராண்டாக இருக்குமா அல்லது புதிய விதிமுறைகளின்படியே 2 ஆண்டுகளாக இருக்குமா என்ற சந்தேகம் மாண வர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.தங்கசாமி, பதிவாளர் எஸ்.கலைச்செல்வன் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக 2014-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறைகளை பின்பற்றுமாறு கல்லூரிகளை வற்புறுத்த மாட்டோம் என்று என்சிடிஇ உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளதாக தெரிய வருகிறது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் பிஎட் படிப்புக்காலம் ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. எனவே, பிஎட் படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் எந்தவித மாற்றமும் இல்லை. படிப்புக்காலம் 2 ஆண்டுகளாகத்தான் இருக் கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...