சென்னையில் வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை மாணவர்களும், தன்னார்வ அமைப்பும் இணைந்து சீரமைத்து வருகின்றன.
தமிழகத்தில்
வெள்ள பாதிப்புக்குள்ளான கல்வி நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்யும்
அமைப்பு (டிஎன்எஃப்எஸ்), சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில்
பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்புடன், ஒசூர்
டி.வி.எஸ். அகாதெமி பள்ளி மாணவர்கள் இணைந்து, பூந்தமல்லி அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் சீரமைப்புப் பணிகளை கடந்த வெள்ளிக்கிழமை முதல்
மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக அந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 500 மாணவர்களும் தங்களின் கைச்செலவுக்கான பணத்துடன், ஒரு மாதம் இயன்ற வேலைகளை செய்து கொடுத்ததுடன், தாங்களே வடிவமைத்த பொருட்களை விற்பனை செய்தும், ரூ.70 ஆயிரம் பங்களிப்பாக வழங்கினர்.
மேலும், இப்பள்ளி சார்பில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பிறருடன் இணைந்து, ரூ.9லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு பள்ளி வளாகத்தில் கழிப்பறைகள் கட்டுவது, சுவர்களுக்கு வர்ணம் பூசுவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அத்துடன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து வகுப்பறை சுவர் மற்றும் கரும்பலகைகளுக்கு வர்ணம் பூசுவதுடன், 22 அறைகளை துôய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இப்பள்ளிக்கு வேண்டிய உதவிகளை தொடர்ந்து மேற்கொள்ள மாணவர்கள் தயாராக உள்ளனர் என ஒசூர் டி.வி.எஸ். அகாதெமி முதல்வர் ஸ்ரீவித்யாமெளலி கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...