அடுத்த 5 ஆண்டுகளில் அரசு சேவைகள் அனைத்தும் செல்போனில் கிடைக்கும் பல்வேறு அரசுத் துறைகளின் அனைத்து சேவைகளும் அடுத்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு செல்போனில் கிடைக்கும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மொபைல் போனில் அரசு திட்டங்களை அறிமுகம் செய்வதற்கான சாத்தியங்களை மத்திய அரசு ஆராய்ந்து வந்தது.இதுபற்றி நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் குறைதீர்வுத் துறை தரப்பில் சாப்ட்வேர் நிறுவன கூட்டமைப்பான நாஸ்காம், கேபிஎம்ஜி ஆகியவற்றுடன் பல கட்ட ஆலோசனை நடைபெற்று அறிக்கை தயாரானது.
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் குறைதீர்வுத்துறை செயலாளர் தேவேந்திர சவுத்ரி கடந்த வாரம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த பரிந்துரை அறிக்கையில், ''மின்னணு நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வரும் 193 நாடுகள் கொண்ட ஐக்கிய நாடுகள் தரவரிசை பட்டியலில், இந்தியா 113ம் இடத்தில் உள்ளது. அரசு செயல்படுத்த உள்ள, செல்போன் நிர்வாக திட்டம் அமலுக்கு வந்தால், டாப் 10 தரவரிசையில் இந்தியா இடம் பிடிக்கும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தொலைநோக்குக் கொள்கைகள் வெற்றி பெறவும், அரசின் எல்லா சேவைகளையும் மக்கள் உள்ளங்கையில் வைத்து தெரிந்து கொள்ளவும் செல்போன் நிர்வாக சேவை திட்டத்தை முடுக்கிவிட வேண்டும்'' என கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...