கொளத்துார்: மாணவ, மாணவியர், ஐந்து பேர் பயிலும் தொடக்கப்பள்ளியில், 2
ஆசிரியர்கள் உட்பட, 5 பேர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளது அனைவரையும்
அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மாவட்டம், கொளத்துார் ஒன்றியம், கோல்நாயக்கன்பட்டி பஞ்., ஏரிக்காடு
கிராமத்தில், அனல்மின் நிலையம் அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
உள்ளது.
இங்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன், 125 மாணவர்கள் படித்தனர். நிலக்கரி
சாம்பல் துகள்கள் பள்ளியில் படர்ந்ததால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை வேறு
பள்ளிகளில் சேர்க்க துவங்கினர்.
நடப்பாண்டு பள்ளியில், 1ம் வகுப்பில், 2 பேர், 3 மற்றும் 4ம் வகுப்பு களில்
தலா, ஒரு மாணவியர், 5ம் வகுப்பில், 3 பேர் என இரு மாணவர், 5 மாணவி உட்பட, 7
பேர் படிக்கின்றனர். அதிலும், 2ம் வகுப்பில் மாணவர்கள் கிடையாது. இரு
மாணவர்கள் அடிக்கடி விடுப்பு எடுத்து கொள்கின்றனர்.
இப்பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் பணிபுரிகின்றனர்.
சமையல் செய்வதற்காக ஒரு சமையலர், ஒரு உதவியாளர், பள்ளியை சுத்தம் செய்ய
பஞ்சாயத்து சார்பில் ஒரு பணியாளர் என, அரசு சார்பில் ஆசிரியர்கள் உட்பட,
ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏரிக்காடு பகுதி பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள துறையூர்,
சாணாவூர், மேட்டூர் தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டதால், ஏரிக்காடு
பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஐந்து மாணவர்களுக்காக,
ஐந்து ஊழியர்கள் பணிபுரிவதால் மாதம் தோறும் லட்சம் ரூபாய் வரை அரசுக்கு
இழப்பு ஏற்படுகிறது. பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்
அல்லது பள்ளியை மூடுவதே நல்லது என, பகுதிவாசிகள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...