Home »
» தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் மே 31ஆம் தேதிக்குள் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும்: நஜீம் ஜைதி
தமிழகம்
உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் மே 31ஆம் தேதிக்குள் சட்டப்பேரவைத்
தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி நஜீம்
ஜைதி கூறியுள்ளார்.தமிழக சட்டப் பேரவையின் தற்போதைய காலம் மே மாதம் 22 ஆம்
தேதி முடிவடைகிறது.
இதேபோல
புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும்
சட்டப்பேரவையின் காலம் முடிவடைவதால் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது
இதனை முன்னிட்டு புதுச்சேரியில் நஜீம் ஜைதி ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர்
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: -
வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் அளிப்பதை தடுக்க உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும். அரசியல் கட்சியினரின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் முறையாக தேர்தல் பறக்கும் படையினர் ஜி.பி.எஸ்.
வசதியுடன் ஒருங்ணைக்கப்பட உள்ளனர்.புதுவையில் அனைத்து வாக்குப்பதிவு
மையங்களும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். வாக்காளர் பட்டியலில்
குளறுபடிகள் உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
புதுச்சேரியில்
அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வினியோகிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி
14ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள
சிறப்பு முகாம் நடத்தப்படும்.சில இடங்களில் நடுநிலைமையை காக்கும் வகையில்
அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர்.
தேர்தல்
பணிகளில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் நேரடி
கண்காணிப்பில் வைக்கப்படுவர். தேர்தல் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள
வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 தொகுதிகளில் வாக்காளர்கள்
தங்களது வாக்கை சரிபார்த்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...