40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை
40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை..
சமூக நலத்துறை 22.02.2016 தேதியிட்ட புதிய அரசாணை எண்.27-ஐ சமூக நலத்துறை அரசு முதன்மை செயலாளர் திரு.பி. சிவசங்கரன் வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1000/- வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊனத்தின் அளவு 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதன் மூலம் 40 சதவிகிதத்திற்கு மேல் ஊனம் இருந்தாலே இனிமேல் உதவித்தொகை வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானம் இல்லாதவராகவும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவராகவும், குடும்ப சொத்து மதிப்பு ரூ.50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும், குடும்பத்தில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண் வாரிசு இருக்க கூடாது என்பது உள்ளடக்கிய ஆதரவற்றோராக இருக்க வேண்டும் என்ற விதி மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்த்தி, பணி இல்லாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் பெயர் மாற்றம்
சமூக பாதுகாப்பு திட்டத்தில் செயல்படுத்தப்படும் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்பதை மாற்றி, மாற்றுத்தினாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்று இனிமேல் அழைக்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...