சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில்
மத்திய அரசு பெட்ரோலுக்கு 4 காசுகளும், டீசலுக்கு 3 காசுகளும்
குறைத்துள்ளது.கடந்த இரு வாரங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4
அமெரிக்க டாலர் வரை குறைந்துள்ளது.
இதன்படி பெட்ரோலுக்கு ரூ. 1.04ம்,
டீசலுக்கு ரூ. 1.53ம் குறைத்திருக்க வேண்டும்.ஆனால், மத்திய அரசு நேற்று
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மூன்றாவது முறையாக உயர்த்தியது. இந்த
விலை உயர்வு மூலம் இந்த நிதி ஆண்டில் அரசுக்கு கூடுதலாக ரூ. 3200 கோடி
வருமானம் கிடைக்கும் எனத் தெரிகிறது.இந்நிலையில் பெட்ரோல் விலையை 4
காசுகளும், டீசல் விலையை 3 காசுகளும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தவிலைக்குறைப்பு இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது.கலால் வரி உயர்த்தப்படாமல் இருந்தால் பெட்ரோல் ரூ. 55.93க்கும், டீசல் ரூ. 37.71க்கும் விற்பனை செய்யப்படும்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், அரசு ரூபாய் அளவில் குறைக்காமல் காசு அளவிலேயே பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வருகிறது.தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மத்திய அரசின் கலால் வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
20 ரூபாய்க்கு விற்க வேண்டியதை 60 ரூபாய்க்கு விற்கிறது.மத்திய அரசு.கேட்பதற்குத்தான் நாதியில்லை..!
ReplyDeletekettalum kathil viluvathillai
ReplyDelete