தமிழகம் முழுவதும் பிளஸ்-2 செய்முறைத் தேர்வுகள் திங்கள்கிழமை (பிப்.8) தொடங்குகிறது.
தமிழகம்
முழுவதும் பிளஸ்-2 அரசுப் பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 4-ஆம் தேதி
தொடங்கி, ஏப்ரல் 1-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்தத் தேர்வுகளை 8 லட்சத்து
80 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
இதனை முன்னிட்டு அறிவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் திங்கள்கிழமை (பிப்.8) தொடங்குகிறது. இந்தத் தேர்வுகள் பிப்.8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை சில பள்ளிகளுக்கும், 16-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சில பள்ளிகளுக்கும் என இரு சுழற்சியாக நடைபெறவுள்ளது. இத்தேர்வில் மாணவர்களின் செய்முறைப்பதிவு ஏடு, வருகைப்பதிவு மற்றும் செய்முறைத்தேர்வு அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்படும்.
ஒவ்வொரு பள்ளிக்கும் வேறு பள்ளியிலிருந்து செல்லும் புறத்தேர்வாளர், தேர்வு அலுவலராக நியமிக்கப்படுவார். மாணவர்கள் மற்றும் தேர்வாளர்கள் 3 மணி நேரம் முழுமையாக ஆய்வகத்தில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அறிவியல் தேர்வுக்கு மட்டும் கால்குலேட்டரை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். புறத்தேர்வு அலுவலர்கள் மதிப்பெண் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பாதுகாப்பாக சமர்ப்பிக்க வேண்டும். ஆய்வகங்களில் செய்முறை தேர்வுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், இருப்பில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ்-2 செய்முறைத் தேர்வுகள் முடிந்த பிறகு வரும் 22-ஆம் தேதி பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...