சிறிய அளவில் வரிசெலுத்துவோருக்குமத்திய பட்ஜெட்டில் 2 புதியவரிச்சலுகைகளைநிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்.
1. பிரிவு 87-ஏ-யின் கீழ் ஆண்டுக்குரூ.5லட்சத்துக்கும்குறைந்தவருமானம்உள்ளோருக்கு ரூ.3,000வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2கோடிக்கும் அதிகமானோர்பயன்பெறுவார்கள்என்று அருண்ஜேட்லி
தெரிவித்தார். வருமான வரி விலக்குஉச்சவரம்பில் எந்த விதமாற்றமும் செய்யப்படவில்லை. 2015-16பொருளாதார ஆய்வறிக்கை இதுகுறித்துமேற்கொண்டபரிந்துரையைகடைபிடித்துள்ளது மத்திய பட்ஜெட்.
2. அதேபோல் சொந்த வீடுஇல்லாதவர்கள்மற்றும் வீட்டு வாடகை அலவன்ஸ்தொகைபெறாதவர்களுக்கும்அருண் ஜேட்லிசலுகைஅறிவித்துள்ளார். இவர்கள்இதுவரைஆண்டுக்கு ரூ.24,000 வரைவரிச்சலுகைபெற்று வந்தனர். இதுதற்போதுரூ.60,000 ஆகஅதிகரிக்கப்பட்டுள்ளது.
60 சதுர மீட்டர்களுக்கு குறைவாககட்டப்படும்வீடுகளுக்கு சேவை வரி இல்லை.
முதல் முறையாக வீடுவாங்குவோரின் ரூ.35லட்சம் வரையிலான வீட்டுக்கடன்மீதானவட்டியில் ரூ.50,000 கூடுதல்சலுகைஅறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்வீட்டின்மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மிகாமல்இருந்தால் மட்டுமே இந்தவட்டிச்சலுகைபொருந்தும்.
இது வாடகை வீட்டில்வசிப்போருக்குபயனளிக்கும் என்று அருண்ஜேட்லிதெரிவித்தார். மேலும் வரி வசூலிப்பைஎளிமையாக்கஅரசு நடவடிக்கைஎடுக்கும்என்றுஅருண் ஜேட்லிதெரிவித்தார்.
வரிகள் குறித்த முக்கியஅறிவிப்புகள்:
ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும்குறைவானவருமானம்உள்ள வரிசெலுத்துவோருக்குஆண்டுக்கு ரூ.3,000 நிவாரண விலக்கு:இதனால் ஒருகோடி வரிசெலுத்துவோர் பயன்பெறுவார்கள்.
ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும்குறைவானவருமானம்உள்ள வரிசெலுத்துவோருக்கு வரிதள்ளுபடி ரூ.2,000 லிருந்துரூ.5,000மாகஉயர்த்தப்படுகிறது.
வாடகை வீடுகளில் வசிப்போருக்குவாடகைஇனத்தைபொருத்தவரை வருமானத்தில்இருந்து குறைப்பு செய்யும்தொகை ரூ.20,000லிருந்து ரூ.60,000 மாக உயர்த்தப்படுகிறது.
60 சதுர மீ பரப்புக்கும்குறைவானபரப்புள்ளவீடுகளுக்கு சேவை வரியில் இருந்துவிலக்குஅளித்தல்.
ஆட்டிசம், பெருமூளை வாதம்போன்றநோய்கள்தொடர்பான ஆரோக்கியகாப்பீட்டுதிட்டத்தின் கீழ் வரும் பொதுகாப்பீட்டுத்திட்டங்களுக்கு சேவை வரி விலக்குஅளித்தல்.
இந்தியாவில் உற்பத்தி செய்வோம்திட்டத்தின்கீழ் உள்நாட்டு உற்பத்தி திறன்களுக்குசுங்கமற்றும்கலால் வரிச்சலுகைகள் வழங்குதல்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...