பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும்
விதிமீறல்கள் நடந்தால், அதுகுறித்து புகார் அளிக்க, அனைத்து தேர்வு
மையங்களிலும் புகார் பெட்டி வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில்,
பெற்றோர் மற்றும் தனித்தேர்வர்களும் புகார் மனுக்களை போடலாம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ல் துவங்கி,
ஏப்ரல், 1ல் முடிகிறது. இந்தத் தேர்வுக்காக, மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
காப்பியடிப்பதை தடுக்க, 15 வகை தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும்,
அனைத்து தேர்வு மையங்களிலும் புகார் பெட்டி வைக்கவும், தேர்வுத்துறை
உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாணவர்களுக்கு தேர்வு மையத்தில் ஏதாவது வசதி
குறைந்தாலோ, கண்காணிப்பாளர் அல்லது முதன்மை கண்காணிப்பாளர் தவறாக நடந்து
கொண்டாலோ, அதுதொடர்பாக, புகார் பெட்டியில் தங்கள் புகார்களை எழுதி போடலாம்.
அதேபோல், பெற்றோரும், மாணவர் தொடர்பாக புகார்களை, புகார் பெட்டி யில்
போடலாம். தனித்தேர்வர்களும் தேர்வறை பிரச்னைகளை தெரிவிக்கலாம்.
இதுதவிர, ஆசிரியர்களும் தங்கள் பிரச்னைகளை
புகார் பெட்டியில் எழுதி போடலாம். தேர்வுத்துறை இயக்குனர் இதுகுறித்து
விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பார்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
8.40 லட்சம் மாணவர்கள்
* பிளஸ் 2 பொதுத்தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 6,550 பள்ளிகளைச் சேர்ந்த, 8.40 லட்சம் மாணவ, மாணவியர் எழுத உள்ளனர்
* 5.56 லட்சம் பேர் தமிழ் மொழியில் படித்து தேர்வு எழுத உள்ளனர்
* பிளஸ் 2 தேர்வுக்காக, 2,422 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; புழல் சிறையில், 97 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
காப்பியடித்தால், 'ரெட் மார்க்':மாணவர்கள்
முறைகேடுகளில் ஈடுபட்டால், அவர்களின் விடைத்தாளில் சிவப்பு குறியீடு இட,
கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவப்பு குறியீடு இடப்பட்ட விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, அதன் முடிவுகள்
நிறுத்தப்படும். விசாரணைக்கு பின், அந்த மாணவரின் தேர்வு முடிவு
வெளியாகும்.
மாணவர் யாராவது கண்காணிப்பாளரிடம் பிரச்னை
செய்தாலும், அந்த மாணவரின் விடைத்தாளில் கண்காணிப்பாளர் சிவப்பு குறியிட்டு
தேர்வு முடிவை நிறுத்தி வைக்க முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...