Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை பயம் இன்றி எழுதுங்கள் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள்.

          பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுகளை பயம் இன்றி சிறப்பாக எழுதுங்கள் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேர்வு தொடங்குகிறதுதமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் விரைவில் தொடங்க இருப்பதால், அதை சந்திக்க மாணவ–மாணவிகள் மும்முரமாக தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.


அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில், பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்தகடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பரீட்சைக்கு தயார்தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வுகள் மார்ச் 4–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 1–ந் தேதி வரை நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 15–ந் தேதி தொடங்கிஏப்ரல் 13–ந் தேதி வரை நடைபெற உள்ளது.பிளஸ்–2 தேர்வுகள் நெருங்கி விட்டதால் மாணவ–மாணவிகள் பாடங்களை படித்து பரீட்சைக்கு தயாராகிஇருப்பீர்கள். இப்போது கடைசி கட்டமாக, படித்த பாடங்களை நினைவு படுத்தி பார்க்கும் திருப்புதல் வேலையில் மும்முரமாக செயல்படுவீர்கள்.பதற்றம் வேண்டாம்மாணவர்களே நீங்கள், எல்லா பாடங்களையும் நன்றாக படித்து இருந்தாலும், அவற்றை நினைவில் கொண்டு வந்து, கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய முறையில் தெளிவாக பதில் எழுதுங்கள்.நீங்கள் எழுதும் அந்த பதில் தான் பதில்கள் தான் உங்களுடைய எதிர்கால வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்க போகிறது.சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ–மாணவிகளுக்கு தேர்வு பயம் நீக்க கலந்தாய்வு கொடுக்கப்பட்டுள்ளது..
* பரீட்சையை நினைத்து பதற்றமோ, பயமோ கொள்ளாதீர்கள்.
* பரீட்சை எழுதும் முன், தேர்வு எழுதும் அறைக்கு செல்லும் முன் அதாவது வீட்டிலேயே படித்த பாடங்களை ஒருமுறை திருப்பிப் பாருங்கள்.
* குறிப்பிட்ட நேரம் படித்து விட்டு, இரவில் நன்றாக தூங்குங்கள்.நம்பிக்கை
* உடலுக்கும், மூளைக்கும் போதிய ஓய்வு கொடுத்தால் தான் மறுநாள் பொழுது உற்சாகமாக இருக்கும்.
* நம்மால் நன்றாக விடை எழுத முடியும் என்ற நம்பிக்கையுடன் தேர்வுக்கூடத்துக்கு செல்லுங்கள்.
* கேள்வித்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே கேள்வித்தாளை வாங்கியதும் நிதானமாக படித்துப் பாருங்கள்.
* 10 நிமிடம் கழித்து விடைத்தாள்கள் வழங்கப்படும்.
* தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள். தெரியாத கேள்விகளுக்கு பின்னர் சிந்தித்து விடை எழுதுங்கள்.* பெரிய விடைகள் எழுதும் போது போதிய விவரங்கள் தெரியவில்லை என்றால் பக்கத்தை நிரப்புவதற்காக சுற்றிவளைத்து கதை அளக்காதீர்கள். அது உங்கள் மனநிலையை விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு காட்டிக் கொடுப்பதோடு, அவரை எரிச்சல் கொள்ளச் செய்யவும் வாய்ப்பு உள்ளது.காப்பி அடிக்கக்கூடாது* எந்த காரணத்தைக்கொண்டும் தேர்வில் ‘காப்பி’ அடிக்காதீர்கள். அருகில் இருக்கும் மாணவர்கள் உங்கள் விடைகளை பார்த்து ‘காப்பி’ அடிக்கவும் அனுமதிக்காதீர்கள். காப்பி அடிக்கும் போது பிடிபட்டால் உங்கள் எதிர்காலமே கேள்விக்குறி ஆகிவிடும். 2 வருடத்திற்கு தண்டனை உண்டு. தொடர்ந்து பல முறை தேர்வு எழுத முடியாமல் போய்விடும்.எனவே மாணவ–மாணவிகள் சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறுங்கள்.இவ்வாறு ச.கண்ணப்பன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பிளஸ்–2 தேர்வு குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை வருமாறு:–மாணவிகள் அதிகம்பிளஸ்–2 தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6,550 பள்ளிகளில் இருந்து 8,39,697 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். இந்த வருடமும் மாணவிகள்தான் அதிகம் பேர் எழுதுகிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்–2 தேர்வுக்கு 2,421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சிறைவாசிகள் 97 பேர் பிளஸ்–2 தேர்வு எழுதுகிறார்கள். இவர்கள் புழல் சிறையில் எழுத இருக்கிறார்கள். இந்த வருடம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் தமிழில் எழுதுகிறார்கள்.தேர்வை சிறப்பாக நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மாவட்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

செல்போனுக்கு தடை

இந்த ஆண்டு தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போனை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை மீறி மாணவர்களோ, ஆசிரியர்களோ செல்போன்அல்லது இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தேர்வு நேரங்களில் துண்டு தாள் வைத்திருத்தல், பார்த்து எழுதுதல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். அதிகபட்சமாக 2 வருடம் வழங்கப்படும்.அங்கீகாரம் ரத்துஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது அவர்களைஊக்குவிக்கவோ பள்ளிக்கூட நிர்வாகம் முயற்சி செய்தால்அந்த பள்ளிக்கூட தேர்வு மையத்தை ரத்து செய்தும் அந்த பள்ளியில் அங்கீகாரத்தை பள்ளிக்கல்வி இயக்குனர் அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் ரத்து செய்வார்கள்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive