நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி மார்ச் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், ரயில்வே பட்ஜெட் பிப்ரவரி 25ம் தேதியும், பொது பட்ஜெட் 29ம் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ளன.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளன்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார்.பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இன்று புது தில்லியில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கால அட்டவணை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...